சீன நாட்டவர் கடத்தி கொலை! அதே நாட்டை சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் கைது
கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டினர் குழுவினரால் மூன்று சீன நாட்டினர் கடத்தப்பட்டு, ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜுலை மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற இந்த குற்றச் செயல் தொடர்பான விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
கைது நடவடிக்கை
அதன்படி, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கண்ட குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த ஒரு சந்தேக நபர் நேற்று (04) கொழும்பு துறைமுக நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 54 வயதான ஒரு சீன நாட்டவர் என தெரியவருகிறது.
ஏற்கனவே, இந்த கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு சீன நாட்டவர்கள், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20