கொச்சிக்கடை தேவாலயத்திற்குள் நுழைய முயன்றவரிடம் இரண்டு அடையாள அட்டைகள்
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் பேராலயத்திற்குள் நேற்றிரவு பிரவேசிக்க முயன்ற நபர் ஒருவர் கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் விசாரணை நடத்திய போது, அவர் இரண்டு அடையாள அட்டைகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.ஒரு அடையாள அட்டையின் பெயர் அன்டன் என்றும் மற்றைய அடையாள அட்டையின் பெயர் இமித்யாஸ் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில்
காவல்துறையினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தனது தந்தை ஒரு கிறிஸ்தவ பக்தர் எனவும், தனது தந்தையின் மரணத்தின் பின்னர் தனது தாய் மறுமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேவாலயத்தின் கீர்த்தனைகளை கேட்டுவிட்டு
புனித அந்தோனியார் தேவாலயத்தின் கீர்த்தனைகளை கேட்டுவிட்டு தான் தேவாலயத்திற்குள் நுழைய முயற்சித்ததாகவும் சந்தேக நபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
எனும், இந்த சந்தேக நபர் மாத்தளையில் உள்ள அவரது வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொச்சிக்கடை கதீட்ரல் திருவிழா அடுத்த 12-13 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
