விசேட அதிரடிப்படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் பலி!
அம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் சூரியவெவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைக்குண்டு காரணமாக காயம்
சந்தேக நபர்கள் வீசிய கைக்குண்டு காரணமாக அந்த அதிகாரி காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின்போது இரண்டு சந்தேக நபர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் தப்பியோடியதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த சந்தேக நபர், சமீபத்தில் கொஸ்கொடவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் சந்தேகிப்பதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
