முல்லைத்தீவில் புதையல் அகழ்வுக்கு தயாரான சந்தேகநபர்கள் காவல்துறையால் கைது
முல்லைத்தீவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய சந்தேக நபர்கள் ஐந்து போர், புதையல் அகல்வுக்கு பயன்படும் உபகரணங்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசுவமடு பகுதியில் புதையல் அகழ்வுக்காக ஒருவரின் அழைப்புக்கினங்க வந்த நிலையில் குறித்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதையல் அகல்வு
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நெலுக்குளம், வவுனியா உலுகெட்டவெவ வீதி, கித்துல்ஹிட்டியாவ, முல்லைத்தீவு, முல்லிவைக்கால் மேற்கு கலபலுவாவ வீதி, தலங்கம வடக்கு, கொஸ்வத்த குறித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் புதையல் அகல்வுக்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் ஒன்றும் மற்றும் அவர்கள் பயன்படுத்தியவாகனம் ஒன்றும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை முல்லத்தீவு நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |