கிருசாந்தியின் நினைவு நாளில் ஜெனிவாவில் ஓங்கி ஒலிக்கப்போகும் அவலங்களின் கேள்விகள்

Human Rights Council Geneva Sri Lanka
By Dharu Sep 07, 2026 01:00 AM GMT
Report

கிருஷாந்தி குமாரசாமி படுகொலை செய்யப்பட்டு இன்று செப்டெம்பர் 7ஆம் திகதியுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

1996ஆம் ஆண்டு செம்மணி இராணுவச் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்ட 18 வயதான கிருஷாந்தி, பின்னர் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரர் மற்றும் அயலவரும் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் இராணுவத்தினரை உள்ளடக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது இலங்கையின் கடந்தகால மனித உரிமை வழக்குகளில் முக்கியத்துவமாகியது.

செம்மணி குறித்து கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளி சோமரத்ன வெளிப்படுத்திய தகவல்

செம்மணி குறித்து கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளி சோமரத்ன வெளிப்படுத்திய தகவல்

கிருஷாந்தி வழக்கின் நீதி

ஆனால், கிருஷாந்தி வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு செம்மணியின் முழு உண்மையை வெளிக்கொண்டு வந்ததா? என்ற கேள்விக்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரும் முழுமையான பதில் கிடைக்கவில்லை. 

1998ஆம் ஆண்டு கிருஷாந்தி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச செம்மணியில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது, வழக்கை ஒரு தனிப்பட்ட கொலைச் சம்பவத்திலிருந்து மிகப் பெரிய மனித உரிமை விவகாரமாக மாற்றியது.

அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆனால், அந்த அகழ்வுகளால் எழுந்த முக்கியமான கேள்விகளுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையான நீதிசார் விசாரணை நடைபெறவில்லை.

குறிப்பாக, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, புதைகுழிகளின் முழுமையான பரப்பு, அவர்களின் மரணத்துக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படும் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பான கேள்விகள் நீடித்தன.

யாழ். மாணவி கிருசாந்தி படுகொலை வழக்கில் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

யாழ். மாணவி கிருசாந்தி படுகொலை வழக்கில் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

செம்மணி உண்மைகள்

இதனால் கிருஷாந்தி குமாரசாமி வழக்கு என்பது ஒரு தனிமனித படுகொலைக்கான நீதி என்ற எல்லையைத் தாண்டி, செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கக்கூடிய ஏனைய உயிர்களின் உண்மையையும் வெளிக்கொணரும் திறவுகோலாக மாறியுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு செம்மணி பகுதியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது மனித எச்சங்கள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டமை, மூன்று தசாப்தங்களாக மறைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் உண்மைகள் மீண்டும் தேசிய மற்றும் சர்வதேச கவனத்திற்கு வந்தன.

2025 செப்டெம்பர் நினைவேந்தலின் போது, அங்கு நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் நீதிமன்றப் பாதுகாப்பில் இருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்திருந்தன.

மேலும், இந்த ஆண்டு கிருஷாந்தியின் 30ஆவது நினைவு தினம் மற்றொரு முக்கியமான சர்வதேச நிகழ்வுடன் இணைகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது வழக்கமான அமர்வு இன்று, செப்டெம்பர் 7ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.

இந்த அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் எழுத்து அறிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதனால், கிருஷாந்தியின் 30ஆவது நினைவு தினம் ஒரு குறியீட்டு முக்கியத்துவத்தையும் பெறுகிறது.

கிரிசாந்தி படுகொலையாளி குறிப்பிட்ட 400 வரையான உடல்களும் சிந்துபாத்தியிலா ??

கிரிசாந்தி படுகொலையாளி குறிப்பிட்ட 400 வரையான உடல்களும் சிந்துபாத்தியிலா ??

ஜெனீவாவில் இலங்கை

ஒருபுறம், செம்மணியில் புதைக்கப்பட்ட உண்மையைத் தேடும் குடும்பங்கள். மறுபுறம், ஜெனீவாவில் இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விவாதம்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் சந்திப்பது, இலங்கையின் கடந்தகால குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் நிலை குறித்து மீண்டும் கேள்வி எழுப்புகிறது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கடந்தகால அரசியல் கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதாக தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தது.

ஆனால், தற்போதைய நிலைமையில் பல முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இன்னும் ஏற்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு  தனது சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, கடந்தகால கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் தேங்கிக் கிடப்பதும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசியல் விருப்பம் போதுமானதாக இல்லாதிருப்பதும் முக்கிய கவலையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கடந்த பல ஆண்டுகளாக இலங்கை தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்து தீர்மானங்களை நிறைவேற்றி வந்துள்ளது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026