வீடுகளிலேயே சிறைவைக்கப்படவுள்ள சந்தேக நபர்கள்
சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்டும் சந்தேக நபர்களை சிறையில் அடைக்காமல் வீட்டுக்காவலில் வைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapaksa) தெரிவித்தார்.
சிறு குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தமது நெருங்கிய உறவினர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வீட்டில் தடுத்து வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சட்டமூலம் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில்
இது தொடர்பான சட்டமூலம் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது போதைப்பொருள் பாவனையாளர்களையும் அவற்றை விநியோகம் செய்பவர்களையும் இலக்கு வைத்து யுக்திய என்ற பெயரில் காவல்துறையினர் முன்னெடுத்துவரும் நடவக்கையில் பெருமளவானோர் கைது செய்யப்படுகின்றனர்.
சிறைச்சாலைகளில் பெரும் இட நெருக்கடி
இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுடன் வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்படுவோரும் அடங்குவதால் சிறைச்சாலைகளில் பெரும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |