போக்குவரத்து விதிகள் தொடர்பில் கடுமையான திட்டம்: வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு இயலாமை புள்ளிகளை வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தும் வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படுமென மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு பொருத்தமான நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு சில மாதங்களில் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
நிறுவன தேர்வு
போக்குவரத்து அமைச்சு, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை மற்றும் இணைந்து வீதி விபத்துக்களை குறைத்தல் மற்றும் உயிர் சேதங்களை தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தியிருந்தன.
எவ்வாறாயினும், இந்த முறை ஓராண்டுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டாலும், இத்திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்ப நிறுவனத்தை தேர்வு செய்ய முடியாததால், தற்போது வரை இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வேலைதிட்டம்
இவ்வாறானதொரு நிலைமைக்கு மத்தியில் அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் காவல்துறையினரின் தரவுகளை சேகரித்து ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
இந்நிலையில், நாளொன்றுக்கு எண்பத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான சாரதிகள் போக்குவரத்து தவறுகளில் சிக்குவதாக பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |