2025 முதல் நாளிலேயே சுவிட்சர்லாந்தில் நடைமுறையான புதிய தடை
சுவிட்சர்லாந்தில் (Switzerland) ஜனவரி முதலாம் (நேற்று) திகதியில் இருந்து பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவதற்கான தடை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
அந்நாட்டில் மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிய தடை விதிப்பது குறித்து கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுவாக்கெடுப்பு நடதப்பட்டது.
அதன்போது, இந்த வாக்கெடுப்பில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடையை அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்று 51 வீதமானோர் வாக்களித்துள்ளனர்.
புதிய சட்டம்
இது தொடர்பாக அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் 6 ஆம் திகதி புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளதுடன, அந்த சட்டம் 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சட்டம் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை மட்டுமே பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு
சுவிட்சர்லாந்தில் சுமார் 400,000 முஸ்லீம்கள் வசிக்கின்றனர், ஆனால் ஒரு சிலர் மட்டுமே முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவதாக பெடரல் கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தடையானது முஸ்லீம் சுற்றுலாப் பயணிகளை, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பாரம்பரியமாக இத்தகைய முக்காடுகளை அணிந்து வரும் சுற்றுலா பயணிகளை பாதிக்கலாம் என சுற்றுலா நிபுணர்கள் கவலைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |