சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கவுள்ள மற்றுமொரு கட்டணம் - நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சி
சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளின் வாடகைகள் இந்த ஆண்டு அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாடகை உயர்வானது வட்டி வீதங்கள் அதிகரிப்பு, பணவீக்கம் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு அடி மேல் அடியாக அமைந்துள்ளது.
மார்ச் 01 ஆம் திகதியாகிய இன்று, வீடுகளுக்கு பொறுப்பான பெடரல் வீட்டு வசதி அலுவலகம், வீட்டு உரிமையாளர்கள் வாடகையை நிர்ணயிப்பதற்கு அடிப்படையான வட்டி வீத தரநிலைப் பட்டியலை வெளியிட உள்ளது.
வீட்டு வாடகை 20% உயரும்
அத்துடன், வீட்டு உரிமையாளர்கள் தாங்கள் வீட்டுக்காக செய்யும் செலவுகளையும் வாடகையுடன் சேர்த்துக்கொள்ளலாம். ஆகவே, இந்த ஆண்டு வீடுகளின் வாடகை உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.
2025 வாக்கில் வீட்டு வாடகை 20% அளவுக்கு உயரும் என வங்கி ஒன்று கணித்துள்ளது. ஆனால், இந்த உயர்வில் பணவீக்கம் தொடர்பான உயர்வு இணைக்கப்படவில்லை.
