தமிழர் பிரதேசத்தை உலுக்கும் வாள்வெட்டு : யாழில் துண்டாக்கப்பட்ட வியாபாரியின் விரல்கள்
யாழில் (Jaffna) வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (04.03.2025) அதிகாலை கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த இருவர், அங்கு கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வாள்வெட்டு தாக்குதல்
இந்த தாக்குதலில் வாள்வெட்டுக்கு இலக்காகியவரது விரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) மற்றும் அரச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) இன்று சபையில் கேள்விகளை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 4 மணி நேரம் முன்
