சிரியாவில் கவிழ்ந்த ஆட்சி : நேரம் பார்த்து காய் நகர்த்தும் இஸ்ரேல்
சிரியாவின் (Syria) முக்கியமான மலைப்பகுதிகளான கோலன் குன்று பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
1974 இல் சிரியாவுடனான போர்நிறுத்த உடன்படிக்கையின் போது கோலன் மலைப்பகுதிகள் சிரியா வசம் வந்தது.
சிரிய ஜனாதிபதி
50 வருடமாக நிலவி வந்த சிரிய ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்து விட்டு, சிரியா தற்போது கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த நவம்பர் 27ம் திகதி தான் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரை அறிவித்தனர்.
கிட்டத்தட்ட 10 நாட்களுக்குள் இவர்கள் அங்கே முக்கியமான நகரங்களை கைப்பற்றி உள்ளனர்.
கோலன் குன்று
HTS மூத்த தளபதி லெப்டினன்ட் கர்னல். ஹசன் அப்துல்-கானி இது தொடர்பாக கூறுகையில், எங்கள் நடவடிக்கைகள் டமாஸ்கஸின் வீழ்ச்சியை உறுதி செய்யும்.
நாங்கள் செல்கிற வழியில் இருக்கும் பிணைக்கைதிகள், அரசு இத்தனை காலம் அடைத்து வைத்து இருந்த கைதிகளை எல்லாம் விடுதலை செய்து வருகிறோம், என்றுள்ளார்.
இந்நிலையில், ஆசாத் ஆட்சி கவிழ்ந்து உள்ள நிலையில் இஸ்ரேல் சிரியாவை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது.
இதன் முதல் கட்டமாக சிரியாவின் முக்கியமான மலைப்பகுதிகளான கோலன் குன்று பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |