"தடா சந்திரசேகரம்” ஐயாவின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை ஆழ்ந்த இரங்கல்
தமிழீழ மக்களின் நீதிக்காக போராடிய சட்ட போராளி "தடா சந்திரசேகரம் ஐயா" அவர்களின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
இன்றைய(18) திகதி இடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினால் வெளியிடப்பட்ட இரங்கல் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
துயரத்தில் ஆழ்த்திய செய்தி
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் இயற்கை எய்தினார் |
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் பாசத்திற்குரியவரும், தமிழ் மக்களின் மதிப்புக்கும் உரியவரமான நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் ஐயா அவர்கள், கடந்த 14.08.2023 அன்று தமிழகத்தில் சாவடைந்தார் எனும் செய்தி தமிழ் தேசியத்தை நேசித்த அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் அதேவேளை, இப்பெருமகனின் தமிழ் தேசிய பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின் முழு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது,



