2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் வெளியீடு
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நாணயத் தாள் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் (Nandalal Weerasinghe) இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கையளிக்கப்பட்டது.
புழக்கத்திற்கான நினைவு நாணயத்தாளாக இது வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 5 ஆவது நினைவு நாணயத்தாள் என குறிப்பிடப்படுகின்றது.
பொருளாதார ஸ்திரத்தன்மை
தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான மத்திய வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், ” சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை ” என்ற என்ற ஆண்டு நிறைவு தொனிப்பொருளுக்கு ஏற்ப இந்த நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என். தௌலகல, உதவி ஆளுநர் கே.ஜி.பி. சிறிகுமார, நாணயத் திணைக்களத்தின் ஆளுநர் பீ.டீ.ஆர். தயானந்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

