மக்களினதும் போராளிகளினதும் தியாகமே ஐ.நா சபையின் கதவை தட்டியது : செல்வம் எம்.பி

United Nations Sri Lankan Tamils Selvam Adaikalanathan chemmani mass graves jaffna
By Sathangani Aug 29, 2025 08:45 AM GMT
Report

எமது இனத்தை அழித்தவர்கள், உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள் அதற்கு எதிரான விசாரனையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம் என வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

செம்மணி உள்ளடங்கலாக இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப் படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம்  (29) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையினுடைய கதவை தட்டியது மக்களினதும், போராளிகளினதும் தியாகம் என்பதை நாம் ஒரு ஒருபோதும் மறந்து விட முடியாது.

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய ரணில்

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய ரணில்

கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் 

இன்று வடக்கு கிழக்கில் எங்கு தோண்டினாலும் தமிழர்களுடைய மனித எலும்புக்கூடுகள் வெளிவருகிறது. வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றது.

முதல் முறையாக மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது மன்னாரிலே. அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது யாழ்ப்பாணத்தில் கூடுதலான மனித எலும்புக்கூடுகள் உள்ள மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மக்களினதும் போராளிகளினதும் தியாகமே ஐ.நா சபையின் கதவை தட்டியது : செல்வம் எம்.பி | International Justice For Mass Graves And Genocide

தாயை தனது பிள்ளை கட்டிப்பிடித்துக் கொண்டு காணப்படுகின்ற எலும்புக்கூட்டு தொகுதியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ் மனித எலும்புக்கூடுகளை பார்க்கின்ற போது வேதனையை ஏற்படுத்துகிறது.

மனித உரிமை மீறல் சம்மந்தமாக செயற்பட்டவர்கள் தண்டிக்கும் வகையில் சர்வதேச நீதிமன்றத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற நிலைப்பாட்டை கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னைநாள் ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஏற்கனவே கூறிய இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் உண்மை தொகையை ஐ.நா.சபை வரை சென்றுள்ளது. இன்று வரை அவரது எண்ணிக்கையே அங்கும் உள்ளது.

மனைவியின் தேவைக்காக அரச ஊழியர்களை பணியமர்த்திய சஜித்! ஆரம்பமாகவுள்ள விசாரணை

மனைவியின் தேவைக்காக அரச ஊழியர்களை பணியமர்த்திய சஜித்! ஆரம்பமாகவுள்ள விசாரணை

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள்

அவ்வாறான ஒரு சூழலில் ஆயர் அவர்கள் கூறிய வார்த்தை கள்வர்கள், கள்வர்களை விசாரணை செய்ய முடியாது என்றது போல எங்களுடைய இனத்தை அழித்தவர்கள், எமது உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், இனத்தை இல்லாது செய்கின்ற சிந்தனையுடன் உள்ளவர்கள் அதற்கு எதிரான விசாரணையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம்.

இந்த கையெழுத்து வேட்டை ஐ.நா.வரைக்கும் சென்று எமக்கு நீதியாக மாற வேண்டும். எம் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளோம்.

மக்களினதும் போராளிகளினதும் தியாகமே ஐ.நா சபையின் கதவை தட்டியது : செல்வம் எம்.பி | International Justice For Mass Graves And Genocide

வடக்கில் இன்றைய தினம் (29) குறித்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் பிறிதொரு தினத்தில் இடம்பெறும். பல ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை பெற்றுக்கொள்வதன் மூலம் எமது இலக்கை அடைய முடியும். இதனூடாகவே எமது கோரிக்கையை சர்வதேசத்திற்கு தெரிவிக்க முடியும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கையெழுத்து போராட்டத்தில் அருட் தந்தையர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், பொது மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாக பலர் கலந்துகொண்டு கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026