இஸ்ரேலிய உயர் அதிகாரிகளைக் கொல்ல ஈரானின் இரகசியச் சதி! மொசாட் முறியடிப்பு
வெளிநாட்டு முகவர்களைப் பயன்படுத்தி இஸ்ரேலிய உயர் அதிகாரிகளைக் கொல்வதற்கும், உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்கும் ஈரான் தீட்டிய இரகசியச் சதியைத் தாங்கள் முறியடித்துள்ளதாக இஸ்ரேலின் மொசாட் (Mossad) உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் மொசாட் அமைப்பின் சார்பில் இது தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அறிக்கையில், ஈரானிய உளவுத்துறை அமைச்சகம் (Ministry of Intelligence) குற்றவியல் முகவர்கள் மூலம் வெளிநாட்டுப் பிரஜைகளை நியமித்து அவர்களை இஸ்ரேலுக்குள் ஊடுருவச் செய்ய முயன்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாத்தியமான இலக்குகள்
அத்தோடு சாத்தியமான இலக்குகள் பற்றிய உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்கும், இறுதியில் தாக்குதல்களை நடத்துவதற்கும் இவர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இஸ்ரேலிய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் (Shin Bet) மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்பட்டதன் மூலம், ஈரானின் பல்லாயிரக்கணக்கான தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாக மொசாட் தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனைகளின் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதுடன் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடிந்துள்ளதாகவும் மொசாட் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் தனது நேரடிப் பங்களிப்பை மறைக்க முயன்றபோதிலும் போலி முகவர்களைப் பயன்படுத்தும் இத்தகைய முறைகள் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்து தாக்குதல்களுக்குப் பின்னால் இருக்கும் ஈரானிய அதிகாரிகளை அம்பலப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு இஸ்ரேலில் இதுவரை இல்லாத அளவிலான உள்நாட்டு உளவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 19 மணி நேரம் முன்