யோஷிதவின் மேன்முறையீட்டை மீளப்பெற்றுக்கொள்ள அனுமதி
மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித ராஜபக்ச தாக்கல் செய்த மேமுறையீட்டை அவர் மீளப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி,யோசிதவால் இந்த மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (07.09.2026) உயர் நீதிமன்றத்தில் அவர் குறித்த மேன்முறையீட்டை மீளப்பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீளப்பெற அனுமதி
குறித்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் மீண்டும் மேன்முறையீடு செய்ய நேரிட்டால், இந்த விடயத்தை எழுப்புவதற்கான உரிமையைத் தக்க வைத்துக் கொண்டு மேன்முறையீட்டை மீளப்பெற உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக நிலுவையிலுள்ள சதித்திட்டக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
எனினும், மேல் நீதிமன்றம் வழங்கிய குறித்த உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனக் கூறிய யோஷித ராஜபக்ச, அதனை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு தனது சீராய்வு மனுவின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |