குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வீடுகளை பரிசளித்த அரசாங்கம்
ரண்விமன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 6 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் பாணம, லாஹுகல மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் 6 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அண்மையில் கையளிக்கப்பட்டன.
மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபாய்
ஒவ்வொரு வீட்டின் நிர்மாணத்திற்காகவும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கையளிக்கபட்ட வீடுகளின் பயனாளர்களின் தொழிலாளர் பங்களிப்பு உள்ளிட்டவற்றுடன் ஒவ்வொரு வீட்டினதும் மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடுகளைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |