யாழில் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ் மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுள்ளார்.
நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
பதில் பாடசாலை நடத்த ஏற்பாடு
இதனைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் சாதகமாகப் பரிசீலித்த ஆளுநர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு 2026.09.09 அன்று விசேட விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை, குறித்த விடுமுறை காரணமாக கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பதில் பாடசாலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |