வடக்கு - கிழக்கில் தொடரும் கனமழையால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகளவிலான கனமழை பெய்து வருகின்றது.
குறிப்பாக, கிளிநொச்சி நகரப் பகுதி மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் கனமழை இடைவிடாது பெய்து வருவதனால், இயல்பு வாழ்க்கையும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் பாதசாரிகள் தமது பயணங்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.



செய்தி - சிவா
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் உள்ள நெற் செய்கை மேற்கொள்ளப்படும் விவசாய வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வயல் நிலங்களில் நீர் தேங்கியுள்ளதால், விவசாயச் செய்கைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பெரும்போக நெற்செய்கைக்கான நிலங்களைத் தயார்படுத்தி வரும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்படக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
தொடர் மழை நீடிக்கும் பட்சத்தில் வயல் நிலங்களில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து, விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |