குவைத்தில் அதிரும் வெடிப்புச் சத்தங்கள்...! இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு
குவைத் வான்வெளியை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வழிமறித்து அழித்து வருவதாக குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.
தங்களது வான் பாதுகாப்புச் செயல்பாட்டு அமைப்புகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து வருதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனை உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் குவைத் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைப்பு
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள பதிவில், “ஈரானியத் தாக்குதல்களுக்கு எதிராகக் குவைத் வான் பாதுகாப்புப் படைகள் தற்போது தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.
تتصدى حالياً الدفاعات الجوية الكويتية لهجمات صاروخية وطائرات مسيرة معادية ، إثر العدوان الإيراني الاثم.
— KUWAIT ARMY - الجيش الكويتي (@KuwaitArmyGHQ) July 23, 2026
تنوه رئاسة الأركان العامة للجيش أن أصوات الانفجارات إن سمعت فهي نتيجة اعتراض منظومات الدفاع الجوي للهجمات المعادية.
يرجى من الجميع التقيد بتعليمات الأمن والسلامة الصادرة عن… pic.twitter.com/5bLHgLmCpj
நாட்டில் கேட்கும் வெடிப்புச் சத்தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளின் எதிர் நடவடிக்கைகளினால் ஏற்படுபவையே ஆகும்.
பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைக் கண்டிப்புடன் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 19 மணி நேரம் முன்