சீனாவின் எச்சரிக்கையைத் தாண்டி அமெரிக்கா சென்றடைந்த தாய்வான் அதிபர்!
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவை பலப்படுத்தும் வகையில் தாய்வான் அதிபர் அமெரிக்கா சென்றடைந்துள்ளார்.
குறித்த பயணத்திற்கு சீனா கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததுடன், அதனையும் தாண்டி தாய்வான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவின், நியூயோர்க்கை சென்றடைந்துள்ளார்.
அவர் தமது உத்தியயோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து மீள திரும்பும் போது வெள்ளை மாளிகை பேச்சாளரை சந்திப்பார் எனக் கூறப்படுகின்றது.
சீனாவின் எச்சரிக்கை
தன்னாட்சி அரசாக உள்ள தாய்வானை தனது நாட்டின் ஓர் அங்கமாகக் கருதும் சீனா அதனை தனது எல்லைக்குள் இணைப்பதற்கு முயற்சி செய்கிறது.
ஒரே சீனா கொள்கையின்படி, எந்த ஒரு நாடும் சீனா மற்றும் தாய்வானுடன் ஒரே நேரத்தில் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளை பேண முடியாது என்று வலுயுறுத்துகிறது.
இந்தநிலையில், தாய்வான் அதிபர் ட்சாய் இங் வென் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மக்கர்தியை சந்தித்தால் பதிலடி கொடுக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது.
இவ்வாறான சந்திப்பினை சீனா கண்டிப்பதாகவும், இந்த செயற்பாடு தொடர்ந்தால் அது கடுமையான மோதலுக்கு வழிவகுக்கும் எனவும் சீனா கூறியுள்ளது.
அமெரிக்காவின் பதில்
இதற்கு பதில் வழங்கியுள்ள அமெரிக்கா, தாய்வான் அதிபரின் விஜயத்தை சீனா மிகைப்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது.
இது பொதுவான பயணம் மற்றும் நிகழ்வு என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
