லண்டனில் சூடுபிடிக்கும் தமிழீழ வியாபாரம்: தமிழ் அமைப்பொன்றின் திடுக்கிடும் நடவடிக்கை!
ஒரு வேட்கையுடன் தமது விடுதலையை எதிர்பார்த்து மிகப்பெரும் விலையைக்கொடுத்து காலத்தின் கட்டாய ஓய்வை எதிர்கொண்டிருக்கும் தமிழினம் தமது அரசியல் அபிலாஷைகளைச் சர்வதேச அரங்கில் முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' இன்று தனது இலட்சியப் பாதையிலிருந்து முற்றிலும் விலகி, வதிவிட உரிமை பெற்றுத்தரும் ஒரு தரகர் நிலையமாக மாறியிருக்கின்றது என புலம்பெயர் தமிழர்கள் பலரும் அங்கலாய்க்கிறார்கள்.
2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் போரின் முடிவுக்குப் பிறகு, தாயகத்தில் அரசியல் செய்ய முடியாத சூழலில், புலம்பெயர் தேசங்களில் இருந்து கொண்டு ஜனநாயக ரீதியாக தமிழீழக் கோரிக்கையை முன்வைக்கவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
சர்வதேச சட்டங்களின் கீழ் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டுவதே இதன் முதன்மை நோக்கமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இன்று அந்தப் புனிதமான நோக்கம் சிதைக்கப்பட்டு, பணத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு "வியாபாரக் கூடாரமாக" இது காட்சியளிக்கிறது எனவும் தமது ஆதங்கங்களை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வரும் நிலையில் ஈழத்தமிழரின் பெருங்கனவை பெயராக கொண்ட ஒரு அமைப்பின் மீதான தொடர் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு ஆழமான பார்வையை செலுத்துகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |