இலங்கைக்கு அருகே கொல்லப்பட்ட மாலுமிகள்! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்து உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை விரைவாக திரும்பிப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 104 உடல்களில் 84 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த உடல்கள் விரைவில் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்படும் என்றும் இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசின் ஒத்துழைப்பு
இந்த உடல்கள் திருப்பி அனுப்புவது ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் முயற்சிகளுடனும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனும் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், உயிரிழந்த இந்த ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.
எவ்வாறாயினும், குறித்த செய்தியினை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |