உக்ரைனைப் போல் ஈழமக்களையும் அமெரிக்கா ஆதரிக்கவேண்டும்! வலுக்கும் அழுத்தம்
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து அவர்களின் அவலநிலையை நிவர்த்தி செய்யுமாறு அமெரிக்க ராஜாங்க செயலாளர் அந்தணி பிளிங்கனிடம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி விலி நிக்கல் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸின் பத்து உறுப்பினர்கள் குழு, அமெரிக்க அண்டனி பிளிங்கனை, ஐக்கிய நாடுகள் சபைக்குள் அமெரிக்கத் தலைமையில், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக வாதிட வேண்டும் வலியுறுத்தியுள்ள நிலையில், விலி நிக்கலின் ட்வீட் வெளியாகியுள்ளது.
10 உறுப்பினர்கள் எழுதிய கடிதம்
ஏற்கனவே அமெரிக்க காங்கிரசின் 10 உறுப்பினர்கள், பிலிங்கனுக்கு, எழுதிய கடிதத்தில், "குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதும், ஐக்கிய நாடுகளின் சாசனம் மற்றும் அமெரிக்க கோட்பாடுகளுக்கு ஏற்ப தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க உதவுவது, இலங்கையில் நல்லிணக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது" என்று குறிப்பிட்டிருந்தனர்.
நீடித்து வரும் பிரச்சினைக்கு அமெரிக்கா தீர்வு காண வேண்டும். அத்துடன் உக்ரைன், கொசோவோ, கிழக்கு திமோர், தெற்கு சூடான் போன்றவற்றில் சுயநிர்ணய உரிமைக்கான அமெரிக்காவின் ஆதரவு, ஈழத் தமிழர் தீர்விலும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று குறித்த 10 காங்கிரஸ் உறுப்பினர்களும், பிளிங்கனிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |