மு.க.ஸ்டாலின் மீண்டும் சட்டசபைக்கு...! விரைவில் அறிவிப்பு: விட்டுக்கொடுக்கும் விஜய்
தோல்வியடைந்த மு.க. ஸ்டாலின் மீண்டும் சட்டசபைக்குள் நுழைய ஒரே ஒரு வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, தவெக தலைவர் 2 பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி என இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை விஜய் விட்டுத்தர வேண்டும்.
அதன்படி திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அங்கு இடைத்தேர்தல் நடைபெறும். அதில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி வாய்ப்புள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் தேர்வு
இதேவேளை, 74 ஆண்டு கால தமிழக தேர்தல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத வகையிலான தேர்தல் முடிவு வெளியாகி உள்ளது. அதே நேரத்தில், 2-வது இடத்தை தி.மு.க. கூட்டணி பிடித்துள்ளது.

எனவே, தி.மு.க.வில் இருந்தே எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விஜயை எதிர்க்க உதயநிதி சரியான நபராக இருப்பார் என தி.மு.க. தலைமை கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இதுதொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |