புதிய கூட்டமைப்பு குறித்து கருத்து வெளியிட மறுக்கும் மாவை
தமிழ் தேசியக் கூட்டமைப்பை தற்போது இருவேறு தரப்பினர் உரிமைகோரி வருகின்ற நிலையில், இன விடுதலை என்ற அடிப்படையில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணையும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
எனினும் புதிதாக கூட்டிணைந்துள்ள ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பதிலளிக்க மறுக்கும் அவர், தமது கட்சி மாத்திரமே கூட்டிணைவு தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்.
கட்சிகளை ஒன்றிணைக்கும் தீர்மானம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டிற்கு முன்னதாக தமது கட்சி, இன விடுதலை என்ற விடயத்தை மையமாகக் கொண்டு அனைத்து தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
எனினும் தமிழரசுக் கட்சியின் தனித்து எடுக்கும் இந்தத் தீர்மானம் எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்ற கேள்விக்கு பதிலளிக்க மாவை சேனாதிராஜா மறுப்பு தெரிவிக்கின்றார்.
ஜனநாய தமிழ் தேசியக் கூட்டமைப்பு
ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிய தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசியக் கட்சி, ரெலோ, புளோட் ஆகியன புதிதாக ஜனநாய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளதுடன், தனியாக தமிழரசுக் கட்சி கட்சி மாத்திரம் கூட்டமைப்பாக செயற்பட முடியாது எனவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரித்துள்ளார்.