உக்ரைனை ரஷ்யா தாக்க அதிக வாய்ப்பு உள்ளது! வெளிவந்த எச்சரிக்கை
America
Russia
Ukraine
War
Dmitry Pesco
By Chanakyan
நாங்கள் உக்ரைன் மீது படையெடுக்கப் போவதாக அமெரிக்கா தான் பீதியை ஏற்படுத்தி வருகிறது என ரஷ்யா அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ (Dmitry Pesco) தெரிவித்துள்ளளார்.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை குவித்தது.
நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, படைகளை குவித்ததால் உக்ரைனை தாக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, உக்ரைனை தாக்கினால் ரஷ்யா கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது.
மேலும் கிழக்கு ஐரோப்பியாவுக்கு அமெரிக்கா கூடுதல் படைகளையும் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
