வடக்கில் அநுர அரசை புறக்கணித்த தமிழ் மக்கள் : காரணத்தை வெளியிட்ட நாமல்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வடக்கில் அநுர அரசு தோல்வியடைந்ததற்கு தமிழ் மக்கள் அரசின் செயற்பாடுகளில் திருப்தி அடையவில்லை என்பதையே வெளிப்படுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு,
வடக்கில் உள்ளூராட்சி தேர்தலில் வென்றிருக்க வேண்டும்
“தமிழ் டயஸ்போராக்கள் அல்லர், புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் பல உபாயங்களைக் கையாண்டது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் திருப்தி அடைந்திருந்தால், உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வடக்கில் தேசிய மக்கள் சக்தி வென்றிருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை.
டயஸ்போராக்களின் தேவை நிறைவேற்றப்பட்டு வந்தாலும் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது. வடக்கு மக்கள் கூட்டமைப்புக்குதான் வாக்களித்தனர். டயஸ்போராக்களும் ஜனாதிபதிமீது வைத்திருந்த நம்பிக்கை தற்போது இல்லாமல்போயுள்ளது.
மக்களுக்கு உண்மை தெரியும்
ஏனெனில் எல்லைகள் அற்ற விதத்தில் பொய்கள் கூறப்பட்டன. வடக்கில் ஒரு கதையும், தெற்கில் மற்றுமொரு கதையும் கூறப்பட்டது. முன்பு போல் அல்லாது தற்போது மக்களுக்கு மொழி ஆளுமை உள்ளதால் வடக்கில் ஒன்றையும், தெற்கில் வேறொன்றையும் குறிப்பிட முடியாது. மக்களுக்கு உண்மை என்னவென்பது தெரியும்.” – என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
