தீர்வற்ற வாக்குறுதிகளால் சரிந்த தமிழர் அரசியல் கோட்டை...!
அண்மைய அரசியல் களத்தில் தமிழ் அரசியல் பரப்பில் நிலவும் கட்டுக்கோப்பற்ற பிளவுகளும் ஒருமித்த கருத்தின்மையும் சர்வதேச மட்டத்திலும் மற்றும் உள்நாட்டிலும் தமிழர்களின் அரசியல் பலத்தை வலுவிழக்கச் செய்து அவர்களைப் பலவீனமான நிலைக்குத் தள்ளியுள்ளன.
தீர்வற்ற வாக்குறுதிகளையே மூலதனமாகக் கொண்டு இயங்கும் பாரம்பரிய தமிழ் தலைமைகளை மக்கள் நிராகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வடக்கு-கிழக்கில் ஒரு பாரிய அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது.
தற்போது மாறிவரும் தென்னிலங்கை ஆட்சி மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய தீர்க்கமான இராஜதந்திர வியூகங்கள் இல்லாததால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
இந்தநிலையில், அரசியல் ரீதியாகத் தமிழ் பிரதிநிதிகள் கோட்டை விட்ட தருணங்களைப் பயன்படுத்தி தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புகளும் அடையாளச் சிதைப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இவ்வாறு, புதிய அரசியல் சூழலில் மக்களின் அபிலாஷைகளை முன்னெடுக்கக் கூடிய தூரநோக்குள்ள தலைமை இல்லாததால் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி குறித்து மூத்த ஊடகவியலாளர் பிரேம் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |