முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஆரம்பமான தமிழ் பொது வேட்பாளாரின் தேர்தல் பரப்புரை
ஜனாதிபதிதமிழ் பொது வேட்பாளார் பா.அரியநேந்திரன் (Aryanendra) முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் பொதுச்சுடர் ஏற்றி ஜனாதிபதி தேர்த்தலுக்கான முதலாவது பிரச்சாரத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வானது இன்றையதினம் (18) இன்று முல்லைத்தீவில் (Mullaitivu) மாலை மூன்று மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக மக்கள் மத்தியில் பிரச்சார நடவடிக்கைகளை உத்தியோக பூர்வமாக முன்னெடுத்து வருகின்றனர்.
பொது வேட்பாளர்
இந்தநிலையில், முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுதூபிக்கு பொது சுடரேற்றி வழிபட்டு தமிழ் மக்கள் சார்ந்து தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் மற்றும் அவரோடு இணைந்து உறுப்பினர்கள் தேர்தலுக்கான முதலாவது பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
மேலும், இந்த அஞ்சலி நிகழ்வில் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி மற்றும் சமூக செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |