தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா!
தமிழீழ கோரிக்கைகளை முன்வைக்கும் புலம்பெயர் அமைப்புகளுடன் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் இன்று (16.11.2025) வெளியான வாரஇறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனாவை வழிநடத்துவது புலம்பெயர் தமிழர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அர்ச்சுனா எம்.பி, “ஆம், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், சுமார் 20 புலம்பெயர் அமைப்புகள் உள்ளன.
கொள்கையற்ற அரசியல்
சில புலம்பெயர் அமைப்புகள் தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையை இன்னும் முன்வைக்கின்றனர். அதற்கு உதாரணம் ருத்ரகுமரன். நான் அவ்வாறானவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதில்லை.

நாடாளுமன்றத்தில் உள்ள முட்டாள்களைப் பார்ப்பதைப் போலவே நான் அவர்களைப் பார்க்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்நாட்டு மக்களுக்கு எந்தவித கொள்கைகளும் இல்லை எனவும் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு எந்தவித அரசியல் கொள்கைகளும் இல்லை எனவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணும்
சிறிலங்கா இராணுவத்தின் நூறு வீதமானவர்கள் மோசமான செயல்களின் ஈடுபடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

ஈழப் போரின் போது மாறி மாறி சண்டையிட்டாலும், செம்மணி கதையில் உள்ளது போல சிங்கள இராணுவத்தினர் எங்களுடைய பெண்களை தகாத முறைக்கு உட்படுத்தியிருந்தாக தெரிவிக்கப்பட்டாலும் இராணுவத்திலிருந்த 100 வீதமானவர்களும் இதுபோன்ற மோசமான செயல்களின் ஈடுபடவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசியத் தலைவர் பிரபாகரனே தனது கடவுள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்