ரணில் வழியை பின்பற்றும் அநுர: வடக்கு தமிழ் மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவாரா?
வடக்கில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராடி தமது உயிரை நீத்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் உறவுகளை நினைவுகூரும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்றைய தினம் (15.11.2025) மாவீரர் வாரம் ஆரம்பித்த நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், ஆண்டாண்டு காலமாக இந்த மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதில் தென்னிலங்கை அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கூட ,மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான பின்னணியில், கடந்த 13 ஆம் திகதி கார்த்திகை வீரர்கள் தினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
1987 , 1989 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளை நினைவுகூர்ந்து குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கும் கட்டுப்பாடுகளின்றி தற்போதைய அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என வடக்கின் தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் அநுரகுமார திசாநாயக்க பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும் கூட தற்போது வரையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
எதிர்வரும் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட வரவு செலவு திட்டத்தில் கூட வடக்கு தமிழ் மக்களுக்கு எதுவித சலுகைகளும் வழங்கப்படவில்லை.
இவ்வாறான செயல்பாடுகளால் கடந்த அரசாங்கங்களைப் போல தற்போதைய அரசாங்கமும் ஒற்றையாட்சி முறையை தான் வலியுறுத்துகிறதா என்றொரு கேள்வி எழுகிறது.
கடந்த அரசியல் தலைவர்களின் பாதையில் அன்றி ஜனாநாயக வழியை கைப்பற்றியுள்ள தற்போதைய அரசாங்கம் இவ்விடயத்தில் எவ்வாறு செயற்படும் என்பது தொடர்பில் வெளிப்படுத்துகிறது கீழ்வரும் காணொளி........
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்