35 வருடங்களின் பின் ஆலய வழிபாட்டுக்கு இராணுவம் அனுமதி - எழுந்துள்ள சிக்கல்

Sri Lanka Army Jaffna Sonnalum Kuttram
By Independent Writer Jul 20, 2025 04:51 AM GMT
Report

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் கடந்த 17ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கியுள்ளனர்.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட கடந்த 27ஆம் திகதி அனுமதித்த இராணுவத்தினர் மீண்டும் 28ஆம் திகதி பாதுகாப்பு காரணங்கள் என கூறி ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்திருந்தனர்.

இந்நிலையிலே நேற்றுமுன்தினம் முதல் ஆலயத்திற்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர்.

அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயத்திற்கு கடந்த 06 மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்திருந்த போதிலும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

குறித்த அனுமதியானது காலை 06 மணியிலிருந்து மாலை 06 மணி வரை மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளமையால் ஆலயத்திற்கு வருபவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இம்மாதம் 31 ஆம் திகதி இராஜேஸ்வரி ஆலயத்தின் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் 24 மணி நேரமும் ஆலயத்திற்குச் சென்று வருவதற்கான சூழல் உருவாக்கப்பட்டாலே இரவு நேர பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் ஆலயத்தின் நான்கு புறங்களிலும் இராணுவ காவலரன்கள் காணப்படும் சூழலே நிலவி வருகிறது.

எனவே அந்த நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆலயம் விடுவிக்கப்பட்டுள்ளது என வாய்மூலம் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமான ஆவணம் அரச அதிகாரிகளால் வழங்கப்பட்டால் மாத்திரம் தமக்கு உண்மையான விடுவிப்பாக அமையும் என ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.

நேற்றையதினம் 18 ஆலய நிர்வாகத்தினர் கோயில் வளாகத்தினைத் துப்புரவு செய்யும் பணிகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் வீட்டிற்கு அஸ்திவாரம் வெட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழில் வீட்டிற்கு அஸ்திவாரம் வெட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அடக்குமுறை சட்டம் வேண்டாம் : யாழில் போராட்டம்

அடக்குமுறை சட்டம் வேண்டாம் : யாழில் போராட்டம்

செம்மணியில் புதையுண்டு கிடக்கும் குழந்தைகளின் எச்சங்கள் : மீண்டும் அகழ்வுப் பணி

செம்மணியில் புதையுண்டு கிடக்கும் குழந்தைகளின் எச்சங்கள் : மீண்டும் அகழ்வுப் பணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020