ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

Sri Lankan Tamils S. Sritharan Sri Lanka Government Of Sri Lanka Department of Immigration & Emigration
By Harrish Apr 03, 2025 04:11 PM GMT
Report

கடவுச்சீட்டு புகைப்பட விவகாரத்தில் ஈழத்தமிழர்களின் இன, மத அடையாளங்களை உறுதிசெய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) கோரிக்கை விடுத்துள்ளார்.

கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை எடுக்கும் போது பெண்கள் நெற்றியில் பொட்டிடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை மேற்கோள் காட்டி, இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே சிறீதரன் எம்.பி மேற்குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடவுச் சீட்டுக்கான புகைப்படங்களை எடுக்கும் போது, தமிழ்ப் பெண்கள் பொட்டிடுவதும், இந்துசமய குருமாராக இருந்தால் அவர்கள் விபூதி, சந்தனம் உள்ளிட்ட மத அடையாளங்களைத் தரித்திருப்பதும் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டுமென, அகில இலங்கை அரச உரிமை பெற்ற புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தினரால், வடக்கு மாகாண புகைப்படப்பிடிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

என் மனைவியை தொட்டால்...ஜனாதிபதிக்கு லொகான் ரத்வத்த பகிரங்க எச்சரிக்கை

என் மனைவியை தொட்டால்...ஜனாதிபதிக்கு லொகான் ரத்வத்த பகிரங்க எச்சரிக்கை

தமிழ் மக்களின் அடையாளம்

அந்தவகையில், மேற்குறித்த அறிவிப்பானது தமிழ் மக்களின் இன, மத அடையாளங்களை வலிந்து பறிக்கும் ஓர் அடிப்படை உரிமை மீறலாக உள்ளதை தங்களின் மேலான அவதானத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை | Tamils Passport Photo Issue Sridharan Mps Request

குறிப்பாக, தமிழர்களது மரபார்ந்த பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகவே தமிழ்ப் பெண்கள் பொட்டிடும் பழக்கத்தை காலம்காலமாக பின்பற்றி வருகிறார்கள். 

ஒரு இனத்தின் உணர்வு நிலையோடு ஒன்றித்துப் போயுள்ள இயல்பான வாழ்வியல் விடயங்களை, தார்மீக காரணங்கள் எவையுமற்று தடுக்க நினைப்பதும், அதுசார்ந்த செயற்பாடுகளை அதிகாரரீதியாக நடைமுறைப்படுத்துவதும் மிகமோசமான அடக்குமுறையே.

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

கடவுச்சீட்டுக்கான புகைப்படம்

அத்துடன், உணர்வுநிலை சார் பண்பாட்டு அடையாளப் பறிப்பென்பது எத்தகைய தாக்கங்களை உருவாக்கக்கூடும் என்பதையும் தாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை | Tamils Passport Photo Issue Sridharan Mps Request

குடியகல்வுத் தேவைகளின் பொருட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள விரும்பும் ஒரு ஈழத்தமிழர், கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தை எடுக்கும்போது தனது இனம் சார்ந்த, மதம் சார்ந்த தனித்துவ அடையாளங்களைத் துறந்தே ஆக வேண்டுமென்ற எந்தத் தேவைப்பாடும் இல்லாத நிலையில், இந்த நாட்டுப் பிரஜைகளின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மேற்படி அறிவுறுத்தலை உடனடியாக மீளப்பெறுவதன் மூலம், தமிழ் மக்களின் தனித்துவ அடையாளங்களையும், அடிப்படை உரிமைகளையும் உறுதிசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் - கஜிந்தன்

அமெரிக்காவை போல் நாடுகடத்த தீர்மானித்துள்ள மற்றுமொரு நாடு

அமெரிக்காவை போல் நாடுகடத்த தீர்மானித்துள்ள மற்றுமொரு நாடு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்