குருந்தூர் மலையில் அடாத்தாக அமரும் புத்தர் -தமிழர்கள் இன்று எதிர்ப்பு போராட்டம் (படங்கள்)

Sri Lankan Tamils Mullaitivu Sri Lankan protests
By Jaso Jun 12, 2022 01:34 AM GMT
Report

குருந்தூர்மலையில் புத்தர்

இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் குருந்தாசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் இன்று (12)காலை ஒன்பது மணிக்கு நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் இராணுவம் காவல்துறை ,விமானப்படை ,கடற்படையினரின் பங்கேற்புடனும் இடம்பெறவுள்ளது.

குருந்தூர் மலையில் அடாத்தாக அமரும் புத்தர் -தமிழர்கள் இன்று எதிர்ப்பு போராட்டம் (படங்கள்) | Tamils Protest Against Kurundur Hill Today

பிரதேச தமிழ் மக்களால் வழிபட்டுவந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலையில் இருந்த ஐயனார் ஆலயத்தின் சூலம் உடைத்து எறியப்பட்டு அதன்பின்னர் அங்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தடைவிதிக்கப்பட்ட பின்னர் குறித்த பகுதி இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவரப்பட்டு அங்கு தொல்லியல் அகழ்வாராட்சி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதே நேரத்தில் அங்கு பௌத்த விகாரை ஒன்றும் புராதன காலத்தை ஒத்த வடிவில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வந்தது.

குருந்தூர் மலையில் அடாத்தாக அமரும் புத்தர் -தமிழர்கள் இன்று எதிர்ப்பு போராட்டம் (படங்கள்) | Tamils Protest Against Kurundur Hill Today

அத்தோடு குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பயிர்ச் செய்கை நடவடிக்கைக்கு பௌத்த பிக்கு மற்றும் தொல்லியல் திணைக்களத்தினாரால் தடை விதிக்கப்பட்டதோடு தண்ணிமுறிப்பு கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்களையும் பௌத்த விகாரைக்குரிய நிலமாக வழங்குமாறு கோரி பௌத்த பிக்குவால் கோரிக்கையும் முன்வக்கப்பட்டிருந்தது.

குருந்தூர் மலையில் அடாத்தாக அமரும் புத்தர் -தமிழர்கள் இன்று எதிர்ப்பு போராட்டம் (படங்கள்) | Tamils Protest Against Kurundur Hill Today

கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு தமிழ் மக்கள் யாரும் செல்வதற்கு இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தி வந்திருந்த நிலையில் தொல்லியல் ஆய்வுப்பணிகள் இடம்பெற்றுவந்த சம நேரத்திலேயே அங்கு மிக பிரமாண்டமான முறையில் புராதன கால செங்கற்களை ஒத்த செங்கற்கள் செய்யப்பட்டு குருந்தூர் மலைக்கு கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் இரவு பகலாக கட்டுமானம் இடம்பெற்றுவந்தது.

இந்த நிலையில் தற்போது விகாரை அமைக்கும் வேலை முற்றுப்பெறும் நிலையை அடைந்துள்ளதால் விகாரையின் உச்சியில் உள்ள கலசத்தில் பூசை வழிபாடுகளை செய்யும் நிகழ்வும் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

சிங்கள மக்கள் யாருமற்ற தமிழர்கள் பூர்வீகமாக வாழும் இந்த பகுதியில் முற்று முழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், முப்படையினர் காவல்துறை உயர் அதிகாரிகள், பௌத்த பிக்குகள், பெருமளவான தென் பகுதியை சேர்ந்த பெரும்பான்மை இன மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

குருந்தூர் மலையில் அடாத்தாக அமரும் புத்தர் -தமிழர்கள் இன்று எதிர்ப்பு போராட்டம் (படங்கள்) | Tamils Protest Against Kurundur Hill Today

இதேவேளை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றில் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு இடைக்கால தடைகோரியும் தமிழ் மக்களுக்கு குருந்தூர் மலையில் உள்ள வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி அரச தலைவர் சட்டத்தரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனால் உச்ச நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மனுதாரர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் ,சிவஞானம் சிறீதரன் ,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இருந்த போதிலும் இதுவரை இடைக்கால தடையுத்தரவு பெறப்படவில்லை என்பதோடு தடையுத்தரவு ஒன்று கிடைப்பதற்கு முன்பதாக விரைவுபடுத்தி விகாரையை கட்டிமுடிக்கும் வகையில் இரவுபகலாக நூற்றுக்கணாக்கான இராணுவத்தினர் ,சிவில் பாதுகாப்பு படையினர் சேர்ந்து இந்த விகாரையை அமைத்து நிறைவுறுத்தும் கட்டத்தில் இந்த புதிய புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் இன்று 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

எதிர்க்கும் தமிழர்கள்

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி மிக பெருமெடுப்பில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தியும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.

குருந்தூர் மலையில் அடாத்தாக அமரும் புத்தர் -தமிழர்கள் இன்று எதிர்ப்பு போராட்டம் (படங்கள்) | Tamils Protest Against Kurundur Hill Today

இன்றைய நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் குருந்தூர் மலைக்கு சென்றுவருவதாகவும் குமுழமுனை தண்ணிமுறிப்பு வீதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராணுவத்தால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இங்கு பிரதிஷடை செய்யவுள்ள புத்தர் சிலை தற்போது சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வருவதோடு நாடு என்ன நிலையில் போனால் என்ன தமிழர் தாயகத்தில் தீவிரமாக பௌத்த மயமாக்கலை மேற்கொள்கிறோம் என்ற செய்தியை பரப்ப தீவிர பிரசாரங்களும் இடம்பெற்று வருகிறது.

எனவே இந்த பௌத்த மயமாக்கல் செயற்பாட்டை எதிர்க்க தமிழர் நிலங்களை குறிப்பாக ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை காக்க அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்