தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் (Samuel James Velupillai Chelvanayagam) 48 வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.
இதற்கமைய தந்தை செல்வாவின் 48 வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் (26.04.2025) காலை யாழ். (Jaffna) தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி
தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியாவில் (Vavuniya) தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா, மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக இன்று (26.04.2025) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தந்தை செல்வநாயகத்தின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூபியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், கட்சியின் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





