கொழும்பு பிரதான நீதவானாக தனுஜா லக்மாலி நியமனம்
கோட்டை நீதவானாகச் செயற்படுகின்ற தனுஜா லக்மாலி (Thanuja Lakmali) கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினூடாக (Judicial Service Commission) இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு பிரதான நீதவானாக செயற்பட்ட திலின கமகே (Thilina Gamage) மொராட்டுவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டை நீதவானாக நியமனம்
இந்த நிலையில் தற்போது கல்கிஸ்ஸை நீதவானாகச் செயற்படும் நிலுபுலி லங்கா (Nilupulee Lanka) கோட்டை நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மொரட்டுவை மேலதிக நீதவான் சத்துரிக்கா சில்வா (Chathurika De Silva) கல்கிஸ்ஸை நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திலின கமகேயின் சகோதரர் அண்மையில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் அவர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |