யாழில் மாணவர்களை இலக்குவைத்து போதை விற்பனை செய்தவர் கைது
Jaffna
Sri Lanka Police Investigation
By Vanan
யாழ்ப்பாணத்தின் ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதைப் பாக்கை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதைப் பாக்கு பக்கெட்டுக்கள் கோப்பாய் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரின் உறவினர்கள் முன்னர் கைது
ஊரெழுவைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே குற்றச்சாட்டில் சந்தேக நபரின் உறவினர்கள் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று காவல்துறையினர் கூறினர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி