கனடா இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி : ட்ரம்ப் அதிரடி
அமெரிக்காவிற்கு (United States) இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது 25 சதவிகித வரி விதிக்க இருப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், கனடா (Canada), மெக்சிகோ (Mexico) உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், கனடா மற்றும் மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அலுமியம் இறக்குமதி
இதையடுத்து, 30 நாட்களுக்கு வரிவிதிப்பைத் தள்ளிவைப்பதாக அவர் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், தற்போது மீண்டும் கனடா மற்றும் மெக்சிகோ உட்பட எந்தெந்த நாடுகளிலிருந்தெல்லாம் ஸ்டீல் மற்றும் அலுமியம் இறக்குமதி செய்யப்படுகிறதோ அந்த நாடுகள் மீதெல்லாம் 25 சதவிகித வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடா வரிவிதிப்பு
இது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கனேடிய ஸ்டீல் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான கேத்தரின் (Catherine Cobden), ட்ரம்ப் கூறுவது போல் வரிவிதிக்கப்படுமானால் அது அழிவுகரமான விடயமாக அமைவதுடன், இரண்டு நாடுகளுக்கும் சவாலான விடயமாகவும் அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இந்த வரிவிதிப்பிலிருந்து கனடா வரிவிதிப்பு கோரவேண்டும் என்று கூறியுள்ள அவர், அப்படி கனடாவுக்கு விலக்கு அளிக்கப்படவில்லையானால் பழிக்குப் பழியாக அமெரிக்காவுக்கு வரிகள் மூலம் கனடா பலமாக பதிலடி கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)