கொழும்பில் வாழும் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் (Colombo) இன்று மற்றும் நாளை விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் (Gangaramaya Temple) வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாகவே இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அந்தவகையில், இன்று (11) மற்றும் நாளை (12) இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை வீதி உலா வர உள்ள நிலையில் இந்த விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள்
பெரஹெர விகாரையில் ஆரம்பமாகி ஜினரத்தன மாவத்தை வழியாகச் சென்று, ஹுனுபிட்டிய வெவ வீதிக்கு திரும்பி, ராமநாயக்க மாவத்தை சந்திக்கு வந்து, ராமநாயக்க மாவத்தை வழியாக ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தி வரை பயணித்து.
ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஊடாக அல்ட்ரயார் அவென்யூ சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, அல்ட்ரயார் அவென்யூ வழியாக ஸ்டேபிள் தெரு சந்தி வரை பயணித்து, வலதுபுறம் திரும்பி ஸ்டேபிள் தெரு, பேப்ரூக் பிளேஸ், பேப்ரூக் சுற்றுவட்டம், ஜினரத்தன மாவத்தை வழியாக கங்காராம விகாரையை வந்தடையவுள்ளது.
இதன் காரணமாக குறித்த காலப்பகுதியில் மேற்படி வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)