இலங்கை வாழ் மக்களுக்கு அரசு கொடுத்த மற்றுமொரு சுமை! விஜித ஹேரத்
அரச ஊழியர்களே நாட்டுக்கு சுமை என அரசாங்கம் கூறுகின்ற போதும் தற்போதுள்ள அமைச்சரவையே நாட்டுக்கு சுமையாக உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் உரையாற்றையில், "பொருளாதாரம் இந்தளவிற்கு வீழ்ச்சியடைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை
அத்துடன் போராட்ட களத்திற்கு தடிகளை தூக்கிக்கொண்டு சென்றவர்களுக்கு தற்போது இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசியவர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
சீன உரக்கப்பலை நாட்டுக்கு கொண்டு வந்து இந்நாட்டு மக்களுக்கு 2400 கோடி நட்டத்தை ஏற்படுத்தியவர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், தற்போது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையுடன் தற்போது நியமித்துள்ள இராஜாங்க அமைச்சர்களின் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.