எரிபொருட்களின் வரி அதிகரிப்பு - மீண்டும் எகிறப் போகும் விலை
Fuel Price In Sri Lanka
Ministry of Finance Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Vanan
பெட்ரோல் மற்றும் டீசலின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 வகை பெட்ரோல் லீற்றர் ஒன்றின் வரி 27 ரூபாயில் இருந்து 52 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரி அதிகரிப்பு

சுப்பர் டீசலின் வரி 13 ரூபாயிலிருந்து 38 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், குறித்த வரி வீதங்களுடன் ஒப்பிடுகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
விலை குறைப்பு
ஆனாலும், நேற்று(2) நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டீசலின் விலை 15 ரூபாவாலும், மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் டீசல் 405 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 355 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.