ஆசிரியையை தாக்கிய ஆசிரியர்: சபையில் பிரதமர் அளித்த வாக்குறுதி
எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் பெண் ஆசிரியை ஒருவரை தாக்கிய சம்பவம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி (Chathuri Gangani) குறித்த சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சபையில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை
அத்தோடு, இந்த தாக்குதலானது பாடசாலை அதிபரின் முன்னிலைியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆசிரியை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருதவதாகவும் அவர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய, இந்த சம்பவம் குறித்து இன்று காலை தனக்கு அறிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
விசாரணை
இதேவேளை, தாக்குதல் சம்பவம் தொடர்பில் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்தியதோடு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சகத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய நாளிலேயே அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் தொடர்ந்து குறிப்பிட்டார்.


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்