யாழில் மாணவி மீது ஆசிரியர் தாக்குதல் -வைத்தியசாலையில் அனுமதி
Jaffna
Jaffna Teaching Hospital
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் தரம் 03 இல் கல்வி கற்கும் மாணவி மீது ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
யாழ். வலிகாமம் வலயத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவியின் கையில் ஆசிரியர் பலமாகத் தாக்கியதில் மாணவி கையைத் தூக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவியின் நிலையை அறிந்து கொண்ட பாடசாலை நிர்வாகம் மருந்தகம் ஒன்றில் நோவுக்குரிய மருந்துகளை வாங்கிப் பூசியுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

எனினும் பாடசாலை விட்டதும் மாணவி வீடு சென்ற நிலையில் தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டாருக்கு தெரியப்படுத்தினார்.
இந்நிலையில் தமது மகள் கையை தூக்க முடியாமல் அவதிப்படும் நிலையை அறிந்த பெற்றோர் யாழ். போதனா வைத்தியசாலையில் மகளை அனுமதித்துள்ளனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி