பாடசாலை மாணவிகளிடம் இழிவாக நடந்து கொண்ட கணித ஆசிரியர் சிக்கினார்!
10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் எட்டு மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான ஆசிரியர் இன்று (07) அரலங்கவில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை - திம்புலாகல கல்வி வலயத்தின் அரலகங்வில கல்விப் பிரிவில் உள்ள உயர்நிலை பாடசாலையொன்றின் கணித ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் அரலகங்வில காவல்துறையினர், பெற்றோர்கள் பல சந்தர்ப்பங்களில் செய்த முறைப்பாடுகளை தொடர்ந்து, கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும், பாடசாலையில் 10ஆம் வகுப்பு படிக்கும் எட்டு மாணவிகள் சந்தேகநபரான ஆசிரியரால் பல சந்தர்ப்பங்களில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (07) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மகளிர் காவல்துறை பணியகம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்