ஆசிரியர்களுக்கு வழங்கப்படாத சம்பளம் : வெடித்தது புதிய சர்ச்சை
செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் கடமைகளை ஆற்றிய ஆசிரியர்களுக்கு அவர்களது சேவைக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதே ஆசிரியர்களே இப்போது நாடாளுமன்ற தேர்தல் கடமைகளை செய்ய அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) குறிப்பிட்டார்.
“சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் விசாரித்தோம், ஆனால் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் தேவையான விபரங்களை வலயக் கல்வி அலுவலகங்கள் இன்னும் வழங்கவில்லை என்று அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர்.இருப்பினும், ஆசிரியர்கள் இந்த விபரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளனர், ”என்று அவர் விளக்கினார்.
ஆசிரியர்களின் உரிமைகள் குறித்த அலட்சியப் போக்கு
ஆசிரியர்களின் உரிமைகள் குறித்த அலட்சியப் போக்கிற்காக பல வலயக் கல்வி அலுவலகங்கள் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சம்பளம் எப்போது வழங்கப்படும்
“அடுத்த வாரம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான சம்பளம் எப்போது வழங்கப்படும் என ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய துறைசார்ந்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காத வலயக் கல்வி அலுவலகங்களை அடையாளம் காணுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவை நான் வலியுறுத்துகிறேன், எனவே யார் பொறுப்பு என்பது பொதுமக்களுக்குத் தெரியும், ”என்று அவர் மேலும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |