தன்னைப்போன்ற உருவம் கொண்ட பெண்ணை தேடிச்சென்று கொலை செய்த பெண்- ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்
ஜேர்மன் நாட்டில் தன்னை போன்று உருவத்தில் உள்ள பெண்ணைத் தேடிச் சென்று கதிஜா என்ற பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மன் நாட்டில் முனிச் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஷராபன்.இவரது காதலர் ஷேகீர். சில நாட்களுக்கு முன்பு ஷராபன் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருந்தார்.
சமூக வலைதளம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பெண்
அப்போது, தன்னைப் போன்று உருவம் உள்ள அல்ஜீரியாவைச் சேர்ந்த கதீஜா(23) என்ற பெண்ணை சமூக வலைதளம் மூலம் கண்டுபிடித்துள்ளார். அதன்பின்னர், இன்ஸ்டாகிராம் மூலம் அப்பெண்ணை தொடர்ந்த கதீஜா, ஆசைவார்த்தைகள் கூறி நேரில் வரவழைத்துள்ளார் ஷராபன்.
அந்த இடத்திற்கு வந்த கதீஜாவை ஷராபனு, அவரது காதலரும் சேர்ந்து காரில் கடத்தி உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி கொன்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஷராபனும், அவரது காதலரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
பின்னர், காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.