கமேனியின் இறுதிச்சடங்கு! முற்றாக மூடப்படும் தெஹ்ரானின் வான்பரப்பு
ஈரானில் நடைபெறவுள்ள முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை அன்று தலைநகர் தெஹ்ரானின் வான்பரப்பு முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற சடங்குகளின் போது விமானப் போக்குவரத்திற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ள கால அட்டவணையின்படி, தலைநகரில் பொதுச் சடங்குகள் நடைபெறுவதால், தெஹ்ரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் வழக்கமான விமானச் சேவைகள் திங்கட்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
ஏனைய விமானச் சேவைகள்
இதேவேளை, செவ்வாய்க்கிழமை அன்று மெஹ்ராபாத் விமான நிலையம் மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கும் என்றும் இமாம் கொமேனி விமான நிலையம் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 9ஆம் திகதி இறுதி சடங்கின் போது, வடகிழக்கு நகரமான மஷாத் வான்பரப்பு மற்றும் அங்குள்ள ஷாஹித் ஹாஷெமிநேஜாத் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளும் முழுமையாக நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, சடங்குகளின் இறுதி நாளன்று மஷாத் நகரத்திற்கான விமானங்களைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான விமானச் சேவைகள் ஜூலை 7 முதல் 8 வரை எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி வழக்கம் போல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |