கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் பதற்றம் - அத்துமீறி நுழைய முயன்றவர் கைது..!
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின்போது தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இம்தியாஸ் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் கரையோர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாத்தளை அகலவத்தை பிரதேசத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 46 வயதுடைய நபரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
தேவாலய ஆராதனைகளை கேட்க வேண்டும் என்பதற்காகவே தான் வந்ததாக சந்தேக நபர் காவல்துறையினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்