பேரழிவை சந்திக்கப் போகும் உலகு!! போரியல் நிபுணர்கள் எச்சரிக்கை
3ஆம் உலகப் போர் மூளும் அபாயம் இருப்பதாக போரியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் மீது நாளை (16) படையெடுக்க வாய்ப்புள்ளது என சில மேற்கத்தேய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இருப்பினும் இது தொடர்பில் உத்தியோபூர்வ அறிவிப்புகள் வெளிவராத நிலையில், ரஷ்யா படையெடுத்தால், மக்கள் ஒற்றுமையுடன் தேசியக் கொடியை ஏற்றி, தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என அந்நாட்டு அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் படைகளை குவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை அனுப்பி வருகின்றன.
இது ஒருபுறமிருக்க, ரஷ்யா படைகள் உக்ரைனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போர் தொடுக்கும் பட்சத்தில், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா, நேட்டோ படைகளும் தயாராக உள்ளன.
இதனால், 3ஆம் உலகப் போர் மூளும் அபாயம் இருப்பதாகவும், பாரிய அழிவுகள் ஏற்படலாம் எனவும் போரியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
